மனிதன் பேசத் தொடங்கி எவ்வளவு காலம் ?

மனிதன் பேசத் தொடங்கி சுமாராக 70,000தொடக்கம்  100,000ஆண்டுகள் வரையிலான காலமே இருக்கும் என்று இதுவரையில் சொல்லப்பட்டு வந்ததால் குரங்குகள் பேச்சு பற்றி பெரிய அளவில் எந்த ஆய்வும் இடம்பெறவில்லை .

baboons

ஆனால் சமீபத்திய புதிய ஆய்வின்படி மனிதர்க்கு மாத்திரமே தனித்துவமானவையாகக் கருதப்பட்டு வந்த உயிர் எழுத்துக்களில் ஐந்தை  பபூன் குரங்குகளால் பேசமுடிகின்றது என்று தெரிய வந்துள்ளது . இத் தகவல்  பேச்சு என்பது 25மில்லியன் ஆண்டுகள் வரை தொன்மையானதாக இருக்கலாம் என்ற  தோற்றத்தைக் கொடுத்துள்ளது . பபூன்கள் மனிதர்களைப்போல உயிர் எழுத்துக்களை பேச்சில் பயன்படுத்துவதை 15 ஆண் பெண் பபூங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டறிந்துள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *