விற்பனைக்கு விடப்படும் உங்கள் மருத்துவத் தரவுகள்

“எங்கள் உடம்புகள் எங்கள் தரவுகள் ” என்ற நூலை எழுதியுள்ள அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழக பட்டதாரியும் மருத்துவருமான அடம் டான்னர் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்கள் நம்மை அசர வைக்கின்றன . மூடிய அறைக்குள் நோயாளியாக உட்கார்ந்து டாக்டருடன் பகிரும் இவ்வொரு அந்தரங்க விடயங்களும் பல பில்லியன் பெறுமதியான வர்த்தகப் பொருட்களாகி வருகின்றன என்கிறார் இவர் .

இத் தகவல்கள் கைமாறும்போது பெயர்கள் வெளியிடப்படாது வெறும் இலக்கங்கள் மாத்திரமே இடப்படுவதாகவும் இவர் கூறி இருக்கின்றார் .

5158

மூடிய அறைக்குள் இருந்து நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் மிக இரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன என்பது தவறு . நோயாளிகள் பால் , வயது , நோய்  என்று பிரிக்கப்பட்டு அதன் பின்பு தரவுகள் சேகரிக்கப்பட்டு , நோயாளிகளுக்கு மருந்து  விற்பனை செய்யும் நிலையங்களுடனும் தொடர்பு கொண்டு மொத்தமாகச் சேரும் விடயங்கள் கைமாறுகின்றன   என்கிறார் இவர் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *