செய்தித் துறையோடு பலமான உறவை ஏற்படுத்த திட்டமிடும் முகநூல்

 

செய்தியாளர்களின் உற்பத்தி அபிவிருத்தி , பிரசுரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்க புதிய வழிகள், வாசகர்களுக்கும் செய்தி நிலையங்களுக்குமான பயிற்சி என்று பல்தரப்பட்ட நடவடிக்கைகளில்  சமூகவியல் வலைப்பதிவுகளுக்கும்  செய்தித் துறைக்கும் இடையில் பலமான உறவை உருவாக்க முகநூல் பல திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது .

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தவறான செய்திகளை பரப்பிய சர்ச்சையில் முன்பு சிக்கியிருந்த முகநூல் இப்பொழுது முகநூல் பத்திரிகைத்துறை திட்டத்தை ஆரம்பிக்க முனைவது பலரது கவனங்களையும் ஈர்த்துள்ளது.

ஏற்கனவே இத் திட்டங்கள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டிருந்தாலும்  இப்போதைய அறிவிப்பு  இந்த நிறுவனம் செய்திகள் விடயத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றது .

466983544

466983544

இத் திட்டத்தின் இயக்குனராக இருக்கும் சிமோ என்பவர் என்பவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் இத் திட்டம் நீண்ட காலமாகவே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒன்றாகும் . எம்மோடு இணைந்துள்ள ஊடகத் துறையினர் வெறும் வியாபார மட்டத்தில்  இணையாமல் உற்பத்தி –பொறியியல் மட்டத்திலேயே இணைய விரும்புகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார் .

அமெரிக்க செய்தி நிறுவனமான சீ.என்.என்னின்  முன்னாள் செய்தித் தொகுப்பாளர் கம்பெல் பிரவுண் என்பவரே இந்தக் கூட்டுக் குழுக்கு தலைமை தாங்குவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *