நூறாவது டெஸ்டில் விளையாடும் ஹஷிம் அம்லா

கடந்த 12 வருடங்களாகத் தொடர்ந்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அதன் முன்னாள் தலைவரான ஹஷிம் அம்லா  இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்   தனது நூறாவது டெஸ்டில் விளையாடி வருகிறார்.

CRICKET-SRI-RSA

பொதுவாக அமைதியான சுபாவம் கொண்ட இவர் அண்மைக் காலங்களில் தன்னைப்பற்றி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசி வருகின்றார் என்று சொல்லப்படுகின்றது . அணித்தலைவர் பதவியில் இருந்து இவர் விலகிக் கொண்ட சமயம்  நிறங்கள் விளையாட்டு வீரர்களை எந்த அளவு பாதிக்கின்றன என்பது பற்றி  பேசி இருந்தாலும் , இவர் அதிகமான பொழுதில் ஒரு தனி மனிதனாகவே இருந்து வருகின்றார் . தனது நூறாவது டெஸ்ட் மோதலுக்கு முன்னராக இவரை கௌரவிக்க இரவு விருந்துபசாரத்திற்கு  அழைத்தபோது அமைதியாக இவர் மறுத்து விட்டார் .

தனது முதலாவது , 21வது, 71வது மேட்ச் போல இதுவும் முக்கியமானது என்கிறார் அம்லா .