காற்பந்தாட்டக் கழகத்தால் நிர்மாணிக்கப்படும் பார்வையாளர் அரங்கம்

இங்கிலாந்தின் முன்னணிக் காற்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் செல்சீ புதிய பார்வையாளர் அரங்கொன்றை நிர்மாணிக்க இருக்கின்றது . 60,000 பார்வையாளர்களை  உள்ளடக்கக் கூடிய இந்த  அரங்கை எழுப்ப கவுன்சில் உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர் .

Chelsea stadium

இந்தக் கழகம் பெரும் ரஷ்ய கோடீஸ்வரரான ரொமான் அப்ரோவிச் என்பவருக்குச் சொந்தமான கழகமாகும் . 2003இல் இக் கழகத்தை வாங்கி இன்று ஒரு தலை சிறந்த கழகமாக மாற்றி இருப்பதில் இவரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது .

இந்தக் கழகத்தை கட்டி எழுப்பிய சிரமத்தை விட தனது கனவு அரங்கத்தை அமைக்க இங்குள்ள கவுன்சிலர்களிடம் அங்கீகாரம் பெற பெரிதும் சிரமப்பட்டுள்ளாரென அறியப்படுகின்றது.