தென்னாபிரிக்க தோல்விக்கு துடுப்பாட்டக்காரர்களே காரணம்-சனத் குற்றச்சாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்   இலங்கை அணியின் துடுப்பாட்டகாரர்கள் செயற்பாடு குறித்து தான் கவலையடைந்துள்ளதாக   தலைமை தேர்வாளர் சனத் ஜயசூரிய  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேல் வரிசை துடுப்பாட்டகாரர்கள், போட்டியின் சூழ்நிலை அறிந்து விளையாட வேண்டும்.

பெரும்பாலான வீரர்கள் முதன் முறையாக வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள். அதனால், முதல் டெஸ்ட் போட்டி அவர்களுக்கு சவாலாக இருந்திருக்கும்.

ஆனால், முதல் போட்டியில் செய்த தவறையே ஏன் இரண்டாவது போட்டியிலும் செய்தார்கள் என தெரி யவில்லை.ஒரு வீரராவது நிதானமாக விளையாடி இருக்க வேண்டும். ஒருவர் கூட அவ்வாறு விளையாடவி ல்லை.

ஆனால், பந்துவீச்சாளர்களை குறைகூற முடியாது. அவர்கள் தென்னாபிரிக்க வீரர்களை ஓட்டங்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர். துடுப்பாட்டகாரர்கள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.