• முகப்பு »
  • உள்ளூர் »
  • மன்னார் புனித சவேரியார் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மன்னார் புனித சவேரியார் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மன்னாரில் சிறந்த கல்லூரியாக திகழும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின்2016 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து (CBG – 2016) ரூபா 50,000 பெறுமதியான மேசைப்பந்து விளையாட்டுக்குரிய உபகரணங்கள் மேசைப்பந்து மேசை, வலை, பந்துகள் மற்றும் துடுப்புகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (11.01.2017) புதன்கிழமை மதியம் 12 மணியளவில் அமைச்சரின் உப அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பழையமாணவர் சங்க நிருவாககுழு உறுப்பினர்கள் குறித்த பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர்  கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது பலவருடகாலமாக பயிற்ச்சிக்காக பாவிக்கப்படும் மேசைப்பந்து மேசையானது உடைந்த நிலையில் கயிறுகளினால் கட்டப்பட்ட நிலையில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதனை கண்டதோடு, கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ்  விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு அல்லலுறும் நிலமையினை தெளிவுபடுத்தினார். அங்கு நிலைமையினை நேரில் கண்ணுற்ற அமைச்சர் தமது நிதி ஒதுக்கீட்டில் குறித்த விளையாட்டுக்கான உபகரணங்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்தநிலையில் நேற்றைய தினம் இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.