போட்டி அட்டவணையை விமர்சிக்கிறார் வோர்னர்.

அவுஸ்ரேலியாவில் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த அடுத்த நாளில் இந்தியாவில் டெஸ்ட் தொடர் தொட ங்குவதால்  குறித்த போட்டி  அட்டவணையை  விமர்சித்துள்ளார் வோர்னர்.

இலங்கை அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.. முதல் போட்டி அடுத்த மாதம் 17-ஆம் திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ஆம் திகதியும், 3-வது மற்றும் கடைசிப் போட்டி 22-ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

அடுத்த நாள் 23-ஆம் திகதி இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி விளையாட உள்ளது. அந்த அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் இந்தியா விற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் டுபாயில் சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் அந்த அணியின் முன்னணி வீரர்களான வோர்னர், அணித்தலை வர் ஸ்டீவன் ஸ்மித், கவாஜா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. அந்த அணி இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்ற தில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுபோன்ற டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டதற்கு வோர்னர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கிரிக்கெட் அவுஸ்ரேலியாதான் இந்த அட்டவணைக்கு முக்கிய காரணம். இங்கு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நமது அணி டெஸ்ட் போட்டியில் விளையா டுவதற்காக வெளிநாடு செல்ல உள்ளது.. இது எந்தவித பலனையும் உருவாக்கப்போவதில்லை. இது மிக மிக மோசமான அட்டவணை’’ என்றார்.