தென்னாபிரிக்க டி20 தொடரில் இலங்கை அணியில் புதுமுக வீரர்கள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியில் அறிமுக வீரர்கள்  களமிறக்கப்படவு ள்ளதாக    தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் தென்னாபிரிக்காவிற்கு     எதிரான டி 20 தொடருக்கான அணியில் புதிய முகங்களான சகலதுறை வீரர் Thikshila de Silva, துடுப்பாட்டகாரர்களான Sandun Weerakkody மற்றும் Niroshan Dickwella தேர்வு செய்யப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

Mahinda College Galle மாணவனான 23 வயது Thikshila, துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் திறன் படைத்தவராக திக ழ்கிறார். உள்ளூரில் அவர் பங்கேற்ற 16 டி 20 போட்டிகளில் 15 சிக்சர்ஸ் அடித்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

சமீபத்திய சுற்றுப்பயணத்தில் Weerakkody, Niroshan Dickwella இருவரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படு த்தியுள்ளனர். தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது Weerakkody சதம் அடித்து அசத்தியுள்ளார்.

எனினும், இதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி 20ம் திகதி தொடங்கவுள்ள டி 20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை தேர்வாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.