டோனியின் விலகல் ஹோலிக்கு சவால்-முரளி

இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து  டோனி விலகியமையானது  ஹோலிக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி மேலும் கூறுகையில், இந்திய அணியின் மிகச் சிறந்த தலைவர்களில் டோனியும் ஒருவர் .அவர் தலைமையில் சுமார் 3 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன்.

அப்போது அவர் தான் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது போல் காட்டிக் கொள்ளமாட்டார் என்றும் மூத்த வீரர்களான ஹசி மற்றும் என்னிடம் நிறைய ஆலோசனைகளை கேட்டறிந்து கொள்வார்.

images

 டோனி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்பு கோஹ்லிக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது.ஆனால் அவர் மிகச்சிறந்த துடுப்பாட்டக்காரராக ஜொலிப்பார்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணிக்கும் ஒரு நாள் அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.இது கோஹ்லிக்கு சவாலாக இருக்கும்.

இருந்த போதிலும் டோனி அணியில் இருப்பதால் அவருடைய ஆலோசனைகளை கோஹ்லி கேட்டறிவார் என்று கருதுவதாக கூறியுள்ளார்.