ரொனால்டோ -2016இன் சிறந்த காற்பந்தாட்ட வீரர்

பிஃபாவின் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது போர்ச்சுகல் வீரர் ரொனால்டோக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. 2016 ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது. அதில், சிறந்த கால்பந்து வீரருக்கான தேர்வில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரெஞ்சின் கிரிஸ்மென் மற்றும் போச்சுக்கலின் ரொனால்டோ ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் ரொனால்டோ விருதை தட்டி சென்றார்.

ronaldo_award.vadapt.767.high.0

விருது பெற்றவர்கள் விவரம்:

சிறந்த கால்பந்து வீரர் – கிரிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்)
சிறந்த கால்பந்து வீராங்கனை – கார்லி லாய்ட் (அமெரிக்கா)

சிறந்த பெண் பயிற்சியாளர் – சில்வியா நெய்ட் (ஜெர்மனி)
சிறந்த ஆண் பயிற்சியாளர் – க்ளவுடியோ ரனைரி (இத்தாலி)
சிறந்த கோல் அடித்த வீரர் – மொஹ்த் பைஷ் சுப்ரி (மலேசியா)