பங்களாதேஷ் தொடரை தவிர்த்தமைக்காக நான் கவலைப்படவில்லை –மோர்கன்

சென்ற வருடம் பங்களாதேஷ் தொடரை தவிர்த்தமைக்காக நான் கவலைப்படவில்லையென இங்கிலாந்து ஒரு நாள் ஆட்ட அணியின் தலைவர் மோர்கன் தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட 20, 50 ஓவர்கள் போட்டிகளின் இங்கிலாந்து அணித் தலைவரான மோர்கன் சென்ற வருடம் பாதுகாப்பு கருதி பங்களாதேஷ் தொடரில் விளையாடுவதைத் தவிர்த்தது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது .

morgan

 

இது பற்றி மும்பாயில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது இந்த முடிவு பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லா விளைவுகளையும் யோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்த்தேன் என்று இவர் கூறியுள்ளார் . கடந்த ஒகோடோபரில் இடம் பெற்ற இத் தொடரில் ஜோஸ் பட்லர் அணித் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தார் .

முன்னாள் இங்கிலாந்தின் அணித் தலைவர்   நாசர் உசேன் இது பற்றிக் கூறுகையில் இங்கிலாந்து அணியை மோர்கன் நட்டாற்றில் விட்டுவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் .  இன்னொரு மாஜித் தலைவரான மிசேல் வாகன் இக்கட்டான சந்தர்ப்பத்தில் அணித் தலைவரைக் காணோம் என்று பத்த்திரிகையில் எழுதியிருந்தார் .