கொழும்பில் முதற் தடவையாக ஆசிய டென்னிஸ் சுற்றுப் போட்டிகள்

இலங்கையின் டென்னிஸ் விளையாட்டு சரிதத்தில் முதற் தடவையாக  ஆண்களுக்கான ஆசிய டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் இன்று கொழும்பில் ஆரம்பமாகி உள்ளன . இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் , இல ங்கை ஆகிய நான்கு நாடுகளின் தலை சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீர்கள் இந்தச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இடம்பெறவுள்ள நான்கு  சுற்றுப் போட்டிகளில்  முதலாவது ஜனவரி 9இல் ஆரம்பித்து 11 வரை நடைபெறும் .

Asian-Tennis-Tour-696x464

இரண்டாவது தொடர் 13இலிருந்து 15 வரை நீடிக்கும் . இதைத் தொடர்ந்து பெண்களுக்கான சுற்றுப் போட்டிகள் ஜனவரி 16 தொடக்கம் 18 வரை இடம்பெறும் . பெண்களின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் 20  தொடக்கம்  22 வரை  இடம்பெறவுள்ளன .

நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறு  தரமான சுற்றுப் போட்டி இலங்கையில் இடம்பெறும் இத் தருணத்தில்   வீரர்கள்   பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை கட்டி எழுப்ப முடியும் . நடைபெறும் நான்கு சுற்றுப் போட்டிகளிலும்  ஒவ்வொரு சம்பியனுக்கும் 5000 டொலர்கள் பரிசு பண மாக அளிக்கப்படும் .