சுமையை அதிகம் ஏற்றாதீர்கள் –மைக்கேல் ஹோல்டிங்

 

தென் ஆபிரிக்க அணியில் சிறப்பாக விளையாடிவரும் இளம் பந்து வீச்சாளரான கசிகோ ரபாடா மீது அதிகம் சுமையை ஏற்றாதீர்கள் என்று எச்சரித்துள்ளார் மேற்கு இந்திய அணியின் பழம் பெரும் பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங்.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் அபாரமாகப் பந்து வீசியிருந்தார் . இவர் மொத்தமாக வீழ்த்தியிருந்த 10 விக்கட்டுகளால்  தென் ஆபிரிக்க அணி இலங்கை அணியை 282 ஓட்டங்களால் வெற்றி ஈட்ட உதவியது..

ரபடாவிற்கு நல்ல எதிகாலம் இருக்கின்றது . இவர் நல்ல முறையில் வழி நடத்தப்பட வேண்டுமென ஹோல்டிங் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

rabada1

இவர் மேலும் 14-15 வருடங்களுக்கு விளையாட வேண்டுமென்றால் இவர் வரிசைக் கிரமமாக 25-30 ஓவர்கள் தினமும் வீச முடியாது . இவர் தன்னை நிர்வகிக்க முடியாது . பந்தை வீசச் சொன்னால் வீசிக் கொண்டே இருப்பார் . இன்னொருவர்தான் இவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் . நன்றாக ஓடுகிறார் . பந்து வீசுகிறார் . ஆனால் இவர் இதை நாள் முழுவதும் செய்ய முடியாது . இந்த 21வயதுக்காரருக்கு நல்லதொரு நிர்வாகி தேவை என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்