இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது சவால் நிறைந்தது-மோர்கன்

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது   சவாலான  ஒன்று என இங்கிலாந்து ஒருநாள் அணித் தலைவர் மோர்கன் தெரிவித்துள்ளார்.

மும்பை புறநகர் பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மோர்கன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எங்களுக்கு சவாலானதே, அதே நேரத்தில் இந்திய அணியுடன் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

இது ஒரு குறுகிய காலத் தொடர்தான். ஆனாலும் நாங்கள் ஏராளமான பாடங்களை கற்றுள்ளோம். ஒருநாள் தொடருக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதால் எங்களை தயார்படுத்திக் கொள்ள இயலும் எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து வீரர் பட்லர் கூறும்போது, நாங்கள் டெஸ்ட் தொடரை இழந்தோம். ஆனால் டெஸ்டில் இருந்து ஒருநாள் தொடர் முற்றிலும் மாறுபட்டது என்றார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி வரும்15-ஆம் திகதி புனேயில் நடைபெறவுள்ளது.. அதற்கு முன்னதாக அந்த அணி இந்திய ‘ஏ’ அணியுடன் நாளையும் (10-ஆம் திகதி), 12-ஆம் திகதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.