தொடர்ச்சியான 28 வெற்றிகள் டோஹாவில் முறியடிப்பு

 

வளைகுடா நாடான கட்டாரின் தலை  நகர் டோஹாவில் இடம்பெற்ற கட்டார் எக்ஸ்சொன் மொபில் ஓபன் டென்னிஸ் தொடரில் நோவாக் சொக்கோவிக் இறுதி மோதலில் பிரித்தானியரான அண்டி மறேயை  6-3, 5-7, 6-4  என்ற கணக்கில் தோற்கடித்துள்ளார் . கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதற் தடவையாக இவர் ஒரு கிண்ணத்தை வென்றெடுத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது . 2 மணித்தியாலங்கள் 54 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில்  29 வயதான செர்பிய வீரர் மிக ஆக்ரோஷமாக விளையாடியதைக் காணக்கூடியதாக இருந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன .

Djokovic

தொடர்ச்சியாக 28 மோதல்களில் வெற்றிக் கொடி நாட்டி வந்த ஸ்காட் வீரரான அன்டி முதற் தடவையாக தோல்வியைத் தழுவியுள்ளார்