ஹாசில்வூட்டுக்கு ஓய்வு

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்ரேலிய  வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வூட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடர் எதிர்வரும் 13-ஆம் திகதி பிரிஸ்பேனில தொடங்குகிறது.

அவுஸ்ரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹாசில்வூட்டு தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அடுத்த மாதம் இந்தியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி விளையாட உள்ளது..

இதனால் அவரது வேலைப்பளுவை குறைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் தெரிவித்துள்ளார்.