வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நூறாவது மோதல்

கொழும்பின் பிரபல்ய பாடசாலைகளான வெஸ்லி –புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான நூறாவது கிரிக்கெட் மோதல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது .

இந்த மோதலின்போது முதற் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரையன் கிளேசன்-ஆர்தர் ஹக்கல் ஞாபகக் கிண்ணம் இரு அணிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது .

peter

முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசெப் கல்லூரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை எடுத்து தனது ஆட்டத்தை நிறுத்தியிருந்தது . பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி அணி முதல் நாள் ஆட்ட த்தில் வேகமாக இரு விக்கட்டுகளை இழந்து , இரண்டாம் நாள் ஆரம்பத்தில் மீண்டும் மூன்று விக்க ட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே  எடுத்திருந்தது . பின்கள  வீரர்கள் தம்மைச் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக ஆடி சகல விக்கட்டுகளையும் இழந்து 324 ஓட்டங்களை எடுக்க உதவினர்.

மீண்டும் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசெப் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 48 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து ஆறு விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.