வெள்ளையடிப்பை தவிர்க்குமா பாகிஸ்தான் ?

410ஓட்டங்கள் எடுத்தாக வேண்டும். கைவசம் 9விக்கட்டுகள் பாகிஸ்தானிடம் இருக்கின்றன . மிஞ்சியிருக்கும் ஒரு நாளில்  இது சாத்தியப்படுமா ?

Australia v Pakistan - 3rd Test: Day 4

இதுவரை பெய்யத் தவறிய மழை கொட்டினால்தான் தப்பமுடியும் என்ற நிலையில் இப்பொழுது பாகிஸ்தான் அணி இருக்கின்றது . இரண்டாவது இனிங்சை தொடங்கிய  அவுஸ்ரேலிய அணி 32 ஓவர்களில் 241 ஓட்டங்களை வேகமாக பெற்று தன் நிலையைப் பலப்படுத்திக் கொண்டது. இது வரையில் அடித்த மிக வேகமான அரைச் சதங்களில் வோர்னர்23 பந்துகளில் அடித்த அரைச் சதம் இரண்டாவது அதிவேக அரைச் சதமாகும்.  பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா  2014-15இல் 21 பந்துகளில் அடித்த  அரைச்  சதமே முதலிடத்தில் நிற்கின்றது .

நான்காம் நாள் முடிவில் ஸ்கோர் விபரம்

அவுஸ்ரேலிய அணி  538/8d & 241/2d

பாகிஸ்தான் அணி       315 & 55/1 (16.0 ov)