ஸ்கந்தாவை இனிங்ஸால் வென்றது சென்.ஜோன்ஸ்

யாழ்.சுன்னாகம் ஸ்கந்தா  கல்லூரி அணியை இனிங்ஸால் வென்றது யாழ் சென்ஜோ ன்ஸ் கல்லூரி.

கடந்த இரண்டு நாட்களாக யாழ். சென்ஜோன்ஸ் கல்லுரி மைதானத்தில் யாழ் சுன்னாகம் ஸ்கந்தா கல்லூரி அணிக்கும் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரிஅணிக்கும் இடையில் டெஸ்ட் போட்டி இடம்பெற்றது.

15870830_1878475775719406_1095481129_n

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா  அணி சகல விக்கட்களையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கெட்டுக்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில்  தோமஸ்கரன் 78 ஓட்டங்களையும் தேவபிரசாத் 52 ஓட்டங்களையும் ஜெனி விளமின் 50 ஓட்டங்களையும் , யதுசன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த ஸ்கந்தா  62 ஓட்டங்களுக்கு சகல விக்கெ  ட்டுக்களையும் இழந்து இனிங்ஸ் தோல்வியை தழுவிக்கொண்டது.

15910289_1878475785719405_1379846228_n