தென்னாபிரிக்க வேகத்தில் சுருண்டது இலங்கை

2-வது டெஸ்டில் தென்ஆபிரிக்க அணியின் ரபாடா, பிளாண்டர் ஆகியோரின் வேகத்தில் இலங்கை அணி 110 ஓட்டங்களில்  சுருண்டது.

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது.

தனது முதல் இனிங்சை தொடங்கிய தென்ஆபிரிக்க அணி டீன் எல்கர் (129), டி கொக் (101) ஆகியோரின் அபார சதத்தால் 392 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

அதன்பின் இலங்கை அணி முதல் இனிங்சை தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தென்ஆபிரிக்க பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு, இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள்.

இதனால் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கருணாரத்ன 24 , 7-வது வீரராக களம் இறங்கிய உபுல் தரங்கா அவுட்டாகாமல் 26 ஓட்டங்களை கூடுதலாக எடுத்தனர். மற்றவர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 110 ஓட்டங்களில் சுருண்டது.

பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இல ங்கை அணி 282 ஓட்டங்கள்  பின்தங்கியதால் பலோ-ஒன் ஆனது. ஆனால் தென்ஆபி ரிக்கா அணி பலோ-ஒன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இனிங்சை தொட ங்கியது.நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவ்வணி விக்கெட் இழப்பி ன்றி 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.