இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்தார் குக்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில், இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டயர் குக், இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

இன்றைய போட்டியின், 11ஆவது ஓவரின் கடைசி பந்தில் குக், பவுண்டரி அடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ரிக்கி பொண்டிங் 2555 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து லொயிட் (2344), மியான்டட் (2228), சந்தர்போல் (2171), கிளார்க் (2049) ஆகியோர் உள்ளனர்.