யுவராஜ் திருமண வரவேற்பு வைபவத்தில் மோடி?

இந்திய அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் நேற்று புதனன்று நடிகையும் ஆடம்பர மொடலுமான ஹஸல் கீச் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்திய கிரிக்கட் அணி தங்கியிருந்த ஹோட்டலில்  திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு வைபவம் இடம்பெற்றது

குடும்ப அங்கத்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் பங்குபற்றிய  நிலையில் திருமண வைபவம் சண்டிகார் நகருக்கு அண்மிய பகுதியில் நடந்தேறியது .. இந்திய அணித் தலைவர் விராத் கோலி. பயிற்சியாளார்  அனில் கும்ப்ளே உட்பட  பல நட்சத்திர கிரிக்கட் வீரர்கள் வரவேற்பு வைபவ த்தில் கலந்து கொண்டிருந்தார்கள் .

Yuvraj Singh with Hazel during rituals of their marriage

மணமகள் இந்து மதம் என்பதால் இன்று கோவாவில் இந்து முறைப்படி திருமணம் இடம்பெ றுகின்றது.ஒரு பண்ணை வீட்டில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு மட்டுப்படுத்தப்பட்ட விருந்தி னர்களே அழைக்கப்பட்டுள்ளார்கள் . டிசம்பர் 5,7 ஆம் திகதிகளில் இடம்பெறும் வரவேற்பு வைபவத்தின்போது பிரதமர் மோடியும் கலந்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகி ன்றது .

இறுதியாக இந்த வருடம் மார்ச் மாதம் இந்திய அணிக்காக விளையாடிய இவர்  கடந்த காலங்களில் 293 ஒரு நாள் ஆட்டப் போட்டிகளில் விளையாடி 8329 ஓட்டங்கள் (13 செஞ்சரிகளும் 51அரைச்சதங்களும் ) எடுத்துள்ளார் . .