கண் கோளாறும் தொடர்ந்த செஞ்சரியும் ..

நடந்து முடிந்த பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய ரொஸ் டெயிலர்  கடைசி நேரத்தில்தான் அணியில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன . அண்மைக்காலமாக இவருடைய துடுப்பாட்டம் சோபிக்காமல் இருந்ததோடு இவர் கண்களில் குறைபாடு காரணமாக உடனடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 32 வயதான  இவர் தான் விளையாடிய கடைசி பத்து இனிங்ஸ்களிலும் சராசரியாக 45.95 ஓட்டங்களையே  பெற்றிருந்தார் .

Ross Taylorpic03

இறுதியாக விளையாடிய பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சில் 37ஓட்டங்கள் எடுத்த டெயிலர் இரண்டாவது இனிங்ஸில் சதம் அடித்து பாகிஸ்தானை வெள்ளையடிக்க உதவியதில் பெரும் பங்கு வகித்தார்.