பறந்து செல்ல வா….

சென்னை நாசரின் மகன் லூத்ஃபுதின் மற்றும் ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பறந்து செல்லவா’.

IMG_7188

நாளை வெளியாக உள்ள இப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்க, பிரபாகர் மற்றும் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லூத்ஃபுதின் பாஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங், சதிஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, சுகன்யா, போன்ற நடிகர்கள் நடிக்கும் இப் படத்தினை பி.அருமைச்சந்திரனின் தயாரிக்க, ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.

சிங்கப்பூரை வெறும் 120 ரூபாயில் சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும் திரைப்படமாக ‘பறந்து செல்லவா’ அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 50 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_2885

வழக்கத்துக்கு மாறாக ஐஸ்வர்யா ராஜேஷ் இப் படத்தில் மார்டன் பெண்ணாக நடித்துள்ளார். இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் புதிய விதத்தில் படமாக்கிஇருப்பதாகவும், இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *