ராணி

கபாலி படத்திற்கு பிறகு சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கிய “ராணி” படத்தில் தன்ஷிகா நடித்துள்ளார்

இப் படத்தை எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார். தன்ஷிகாவுடன் பேபி வர்ணிகா, பேபி வர்ஷா, சங்கர் ஸ்ரீஹரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

NTLRG_20161205123805869924

திருவண்ணா மலையை சேர்ந்த தன்ஷிகா மலேசியாவில் வேலை செய்யும் தன் முறைப் பையனை காதலிக்கிறார். காதலுக்கு குடும்பத்துக்குள் எதிர்ப்பு வரவே தானும் மலேசியாவுக்கு சென்று விடுகிறார். அங்கு காதலரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்.

இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் கணவர் காணாமல் போய் விட, கணவரைத் தேடி அலைகிறார் தன்ஷிகா. அந்த தேடலில் பல சிக்கல்களை சந்திக்கிறார்.

NTLRG_160503153844000000

இந் நிலையில் அவரது இரட்டை குழந்தைகளுக்கும் ஆபத்து வருகிறது. தன் கணவனையும் கண்டுபிடித்து குழந்தைகளையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதையாக நகர்ந்து செல்கிறது.

தன்ஷிகாவின் கேரக்டர் பெயர் ராணி. திருவண்ணா மலையில் இருக்கும்போது கிராமத்து பெண்ணாகவும், மலேசியா சென்றதும் மார்டன் பெண்ணாகவும் மாறிவிடுகிறார். தன்ஷிகாவுக்கு சண்டை காட்சியெல்லாம் இல்லை. எல்லா பிரச்னைகளையும் தன் புத்திசாதுர்யத்தால் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

மொத்தத்தில் ராணி ராணியாகவே ஜொலிக்கிறார்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *