ராஜமௌலியின் மற்றுமொரு பிரம்மாண்டம்

பாகுபலி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக மாறியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிபு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே பாகுபலி 2 படத்திற்குப் பின்னர் ராஜமௌலி எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, இது பற்றி இதுவரை எதுவும் சொல்லாமலே இருந்து வருகிறார் ராஜமௌலி.

நேற்றுச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமௌலி தன்னுடைய அடுத்த படம் பற்றி கொஞ்சமாகப் பேசியுள்ளார். என்றாவது ஒரு நாள் மகாபாரதத்தை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என்னுடைய படங்களுக்கும் காட்சிகளுக்கும் அமர் சித்திர கதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். ராஜமௌலியிடமிருந்து மற்றுமொரு பிரம்மாண்டத்தை மகாபாரதம் வடிவில் அடுத்த சில வருடங்களில் எதிர்பார்க்கலாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *