தாமதமாகும் சிவலிங்கா

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடித்திருக்கும் படம் – சிவலிங்கா. கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிக்க பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிவலிங்கா படத்தின் தமிழ் ரீ-மேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது.

director-vaasu-sivalinga-jan03

எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகவிருக்கிறது. காஞ்சனா – படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சிவலிங்கா படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

பைரவா ஃபீவரில் உள்ள தியேட்டர்காரர்கள் சிவலிங்கா படத்தை கண்டு கொள்ளவில்லை. முட்டிமோதி எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று முயற்சி செய்து பார்த்தார் தயாரிப்பாளர்.

100 தியேட்டர்கள் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் ஜனவரி 26 அன்று வெளியிடலாமா என்று ஆலோசித்துள்ளனர். அந்த திகதியில் சிங்கம்-3 வெளிவருவதால் அப்போதும் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். பிப்ரவரியிலும் ஏகப்பட்ட படங்கள் வெளியாக வரிசையில் காத்திருக்கின்றன

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *