காலம் தாழ்த்தும் கடம்பன்

நடிகர் விமலை வைத்து இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் மஞ்சப்பை படத்தை இயக்கியவர் ராகவன். இவரது இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் கடம்பன் திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் கடம்பன் படத்தை தயாரித்துள்ளது.

1480664224-1001

இப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். மலைசாதி இளைஞனாக ஆர்யா நடிக்கும் கடம்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கேத்ரின் தெரெசாவுக்கு மலைசாதிப் பெண் வேடம்தானாம். குண்டே ஹிந்தி படத்தில் நடித்து புகழ்பெற்ற தீப்ராஜ் ராணா வில்லனாக நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படம் அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. கடம்பன் பிப்ரவரி மாதம் ரிலீசாக வாய்ப்பு இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டாலும், கடம்பன் படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறதாம்.

28

முக்கியமாக கடம்பன் படத்தில் மிகப்பெரிய யானைக்கூட்டம் இடம்பெறுகிறதாம். இந்தக் காட்சியை கிராபிக்ஸில் உருவாக்குவதற்கே காலஅவகாசம் தேவைப்படுகிறதாம். எனவே கடம்பன் படத்தை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம்தான் திரைக்கு வருமாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *