மீண்டும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்

ரேணிகுண்டா, 18 வயது படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் தற்போது இயக்கும் படம் கருப்பன். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

rekka-trailer

இப் படம் மதுரை மற்றும் தேனி பகுதியில் நடக்கும் கதை. தற்போது டிரண்டிங்காக இருக்கும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை. விஜய்சேதுபதி மாடுபிடி வீரனாக நடிக்கிறார். முதலில் விஜய்சேதுபதி ஜோடியாக இறுதிச்சுற்று ரித்விகா சிங் நடிப்பதாக இருந்தது.

Lakshmi-Menon-to-sign-Vijay-Sethupathi-next

ஆனால் அவரது தோற்றம் பக்கா மதுரை பெண்ணின் தோற்றத்துக்கு செட் ஆகாததால் அவர் நடிக்கவில்லை ஏற்கெனவே ஜிகிர்தண்டா, கொம்பன், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, படங்களில் மதுரை பெண்ணாக கலக்கிய லட்சுமிமேனனை ஒப்பந்தம் செய்து விட்டனர். றெக்க படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமிமேனன். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *