தனக்கான நாயகியை தேர்வு செய்த அதர்வா

நடிகர் அதர்வாவின் ஈட்டி திரைப்படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனாலும், தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கமிட் பண்ணி வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா.

ttttttttttttttt

பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னேஷ் இயக்கி வரும் “ஒத்தைக் ஒத்த” என்ற படமும் அவற்றில் ஒன்று. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தை தயாரித்த விஷன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அதர்வாவின் அப்பாவாக பிரசாந்தின் அப்பா தியாகராஜன் நடிக்கிறார். சித்திரம் பேசுதடி ஹீரோ நரேன் வில்லனாக நடிக்கிறார்.

மாணவர்களின் கல்லுரி வாழக்கை, காதல், தங்களுக்குள் யார் பெரியவன் என்பதில் மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் ஆகியவற்றை மையமாக வைத்தே ஒத்தைக்கு ஒத்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.

Atharva-Priya-Anand

இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்களுள் ஒருவராக நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த அச்சமின்றி படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக வாய்பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார்.

ஒத்தைக் ஒத்த படத்திலோ கல்லூரி மாணவியாக அதர்வாவின் காதலியாக நடிக்கிறாராம் வித்யா பிரதீப். இந்தப்படத்தில் நடிக்கவிருக்கும் இன்னொரு கதாநாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதர்வா தரப்பிலிருந்து ப்ரியா ஆனந்தை சிபாரிசு செய்வதாக படக்குழுவினர் மத்தியில் தகவல் அடிபடுகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *