அம்மா வேடங்களில் கலக்கும் ஊர்வசி

அனுஷ்காவின் அம்மாவாக இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த ஊர்வசிக்கு, பல படங்களில் அம்மா வேடங்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, உன்னோடு கா, மீன்குழம்பும் மண்பானையும், கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்த ஊர்வசி தற்போது அம்மா வேடங்களில் பிசியாகி விட்டார்.

குறிப்பாக, சிவலிங்கா, மகளிர் மட்டும் போன்ற படங்களில் அவரது கேரக்டர்கள் பேசப்படுமாம். அந்த வகையில், செண்டிமென்டான அம்மாவாக நடித்திருந்தபோதும், காமெடி காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளாரார் ஊர்வசி.

இந்த படங்கள் திரைக்கு வரும்போது ஊர்வசியின் மார்க்கெட் எகிறி விடும் என்கிறார்கள். இதனால் அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா உள்ளிட்ட சில அம்மா நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *