நிறைவெய்திய உதயநியின் படப்பிடிப்பு

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்து வரும் படம் “பொதுவாக எம்மனசு தங்கம்”. அவருடன் பார்த்திபன், சூரி, நிவேதா பெத்துராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளிலும் முன்பை விட அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ள உதயநிதி, அரசியல் தாதாவாக நடித்துள்ள பார்த்திபனுக்கும், உதயநிதிக்குமிடையே நடக்கும் பிரச்சினை தான் இப் படமாம்.

அத்தோடு, அரசியல்வாதியான பார்த்திபனை தோற்கடிக்க உதயநிதி தேர்தலில் போட்டியிடுவதும். அவருக்கு இணையாக வீதிகளில் கட்-அவுட்கள் வைத்து அமர்க்களப்படுத்துவதும் இந்த படத்தில் அரங்கேறியுள்ளதாம்.

கூடவே உதயநியின் நண்பனாக நடித்துள்ள சூரி, இதற்கு முன்பு உதயநிதி படங்களில் சந்தானம் கலக்கியதைப்போன்று காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் மதுரை, தேனி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், இன்று இரவோடு படப்பிடிப்பு நிறைவு பெறுகிறதாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *