வீர சிவாஜி

தனது தாத்தாவின் பெயரோடு வீரத்தைச் சேர்த்து களமிறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு. ‘வீர சிவாஜி’ கைகொடுத்தாரா என எண்ணிக்கொண்டு படத்தினை பார்க்க ஆரம்பிக்கலாம்

கதைக்களம்

அனாதையான விக்ரம் பிரபுவுக்கு, ‘எங்கேயும் எப்போதும்’ வினோதினியும் அவருடைய மகளும் ஆதரவாக இரு க்கிறார்கள். டாக்ஸி டிரைவரான விக்ரம் பிரபுவுக்கு ஒரு மோதலில் ஷாம்லி மேல் காதல் வருகிறது. ஒரு தலைக்காதலை, இருபக்கக் காதலாக மாற்ற விக்ரம் பிரபு போராடிக்கொண்டிருக்கும் சூழலில், வினோ தினியின் மகள் ‘பிரைன் ட்யூமர்’ நோயால் பாதிக்கப்படுகிறார்.

images (3)

சத்திர சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர்பிழைப்பார் என்ற சூழலில், அவரின் மருத்துவச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் விக்ரம் பிரபுவுக்கு தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு 5 லட்சம் ரூபாயை புரட்டிய விக்ரம் பிரபு, அதை 25 லட்சமாக மாற்ற போலி பைனான்சியரான ஜான் விஜய்யிடம் சிக்குகிறார்.

மக்களுக்கு தன்னிடமிருக்கும் கள்ள நோட்டுகளைகொடுத்து நல்ல பணம் வாங்கிக்கொண்டு மக்களை ஏமாற்றும் ஜான் விஜய் அன்ட் கோ, விக்ரம் பிரபுவின் பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாகிறது.

CINE-VICKRAM-SHALINI

10 நாட்களுக்குள் 25 லட்சம் பணம் தேவை என்ற சூழலில், தன்னிடமிருந்த பணத்தையும் இழந்து நிற்கும் விக்ரம் பிரபு, தன் வீரத்தாலும் விவேகத்தாலும் அந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘வீர சிவாஜி’ கதையாக தொடர்கிறது.

வீர சிவாஜிக்காக ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைல் பித்தலாட்டங்களை மையமாக வைத்து ஒரு ‘ஒன் லைன்’ கதையை தேர்வு செய்திருக்கும் இயக்குனர் கணேஷ் வினாயக், அதில் வழக்கமான காதல், சென்டிமென்ட், காமெடிகளைச் சேர்த்து ஒரு சுமாரான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் முதல் அரை மணி நேரம் எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியாமல் பயணிக்கிறது திரைக்கதை. இடைவேளைக்கு முன்னைய அரைமணி நேரம் கொஞ்சம் பரபரப்பாக சென்று, ‘இடைவேளை’யும் போடுகி றார்கள்.

Veera-Sivaji-Movie-Images-3

அதன்பிறகு வில்லனுக்கும், ஹீரோவுக்கும் இடையே விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும் என்று நினைத்து வந்தமர்ந்தால் மறுபடியும் முதலிலிருந்து காதல், சென்டிமென்ட், காமெடி என சம்பந்தமில்லாமல் படத்தை இழுத்தடித்திருக்கிறார்கள். இதில் இடையிடையே பாடல்கள் வேறு …!

சுகுமாரின் ஒளிப்பதிவு , இமானின் பின்னணி இசை ஆகியவை சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

veera-sivaji-movie-stills-vikram-prabhu-shamlee

முதல் இரண்டு படங்களின் கதைகளை நன்றாக தேர்வு செய்த விக்ரம் பிரபு, அதன்பிறகான படங்களுக்கான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்திருப்பதில் சறுக்கியிருப்பதாகவே தெரிகிறது. படத்தின் ஹீரோவாக தன்னால் முடிந்தளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார் விக்ரம்.

திரைக்கதையில் எவ்வித பங்களிப்புமில்லாத வழக்கமான நாயகி பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி யிருக்கிறார் ஷாம்லி. அதைத் தவிர அவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. வில்லன் ஜான் விஜய்க்கும் வித்தியாசமான வில்லன் வேடமெல்லாம் இல்லை. ஆனால், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திரு க்கிறார். யோகிபாபு, ரோபோ ஷங்கர், ராஜேந்திரன் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

veera_shivaji002

இடைவேளைக்கு முந்தைய அரைமணி நேரக்காட்சிகள் , பின்னணி இசையும் ஒளிப்பதிவும் வீர சிவாஜிக்கு பல த்தைக் கொடுத்திருக்கிறது. அதுபோல திரைக்கதை மற்றும் பாடல்கள் பலவீனமாகச் செல்கிறது

மொத்தத்தில்… கதையிலும் புதுமையில்லை… திரைக்கதையிலும் சுவாரஸ்யமில்லை! வெறுமனே காதல், காமெடி, சென்டிமென்ட் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கமான ஆக்ஷன் படத்தை பார்க்க விரும்புபவர்கள் ‘வீர சிவாஜி’யை ரசிக்கலாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *