uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு   English
 
logonbanner-1
news_banner
news_banner
hotnews
சவால்களை எதிர்நோக்கத் தயார்; ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு
pic vide
பேரனர்த்த நகரத்தின் கேள்வி
சிறப்பு கட்டுரைகள்  >> பேரனர்த்த நகரத்தின் கேள்வி
பேரனர்த்த நகரத்தின் கேள்வி
essay கடந்த நூற்றாண்டு வரைக்கும் முல்லைத்தீவு ஒரு பழைய நகரம். அந்த நகரத்தின் கடற்கரையை மாறி மாறி கைப்பற்றிக் கொண்ட வெள்ளைக்காரர்கள் அதனை அப்படித்தான் பதிவாக்கியிருக்கின்றனர்.



பாக்கர், ஜே.பி.லூயிஸ் போன்ற நகரும் ஆவணப்பதிவாளர்கள் அதனையே முல்லைத்தீவு பற்றிய தமது குறிப்பாக விட்டுச் சென்றிருக்கின்றனர். படகுத் துறைகளும், கோட்டைகளும், பழைய தேவாலயமும், பழைய வீதியும், பாலமும் இன்னமும் ஆதாரங்களாக மூடுண்டு கிடக்கின்றன.

பழைய வரலாற்றை விட இந்த நகரத்திற்கும் இடையறாத துயரக் கோடுகளாலான நினைவுத் தொடர்ச்சியொன்று உண்டு. வெள்ளைக்காரர்கள் போல நினைவுபடுத்தி வைத்துக் கொள்ள அந்த நகரம் இப்போது எதையும் வைத்திருக்கவில்லை.

எஞ்சி நிற்கும் ஒவ்வொரு பேரவல நினைவையும் அழித்துக் கொண்டே மீளெழுகின்றது. எதை அடைவு வைத்தாவது மேலெழுந்து வரும் முல்லைத்தீவாளர்களின் எச்சத்திலும் எழும் பண்பு அந்த நகரத்தை அடிக்கடி அலங்காரப்படுத்திக் கொள்ள வைக்கின்றது.

மூவாயிரம் பெயரோடு நிமிர்ந்திருக்கும் ஆலயம்

ஆனால் எந்த அலங்காரத்துக்குள்ளும் அவ்வளவு இலகுவில் எடுபடாத ஒரு ஆலயம் முல்லைத்தீவு நகரத்தில் இன்னமும் நிலைத்திருக்கின்றது. பெரும் போர் சூறை முல்லைத்தீவை அடியோடு புரட்டிய போதிலும் ஆலயத்துக்கு விக்கினங்கள் நேரவில்லை.

சின்னச் சின்ன காயங்களோடு, கறைபடிந்த பேரனர்த்த நிழலோடு அது நிமிர்ந்திருக்கின்றது. முல்லைத்தீவை கசக்கிக் காயப்போட்ட கடல் பேரவலத் தில் காவுகொள்ளப்பட்டவர்களுகாக உருவானதே அந்த ஆலயம். இன்றும் பேரனர்த்த வாசனையோடும், சில நிமிட நேரங்களில் கடலால் அள்ளிச் செல்லப்பட்ட மூவாயிரம் உயிர்களின் பெயரோ டும் பெருமண்டபம் இப்போதும் நிறைந் திருக்கின்றது.

மரியாதையிழந்த கடலின் காலை

2004 ஆம் ஆண்டு இன்றைய நாள் காலை 8 மணியைத் தொட்டது. போரின் மறைவிலிருந்து எழுச்சி பெற்ற அந்த நகரவாசிகளுக்கு மீளெழுச்சி பெரும் சவாலாகவோ, வேதனைக்குரிய ஒன்றாகவோ இருக்கவில்லை. யாருடைய உதவியும் இன்றி பிரகாசமடைந்திருந்தனர்.

அந்த  வாழ்வுப் பிரகாசத்துக்கு அமைதியாகவே கிடந்த ஆழமற்ற கடல் எப்போதும் ஆறுதலாயிருந்து. யாருக்கும் கிடைக்காத கடல் செல்வத்தை அள்ளிக் கொட்டியது முல்லைத்தீவுக் கடல். மக்களும் கடவுளுக்கு நிகரான மரியாதையோடு கடலை அணுகினர்.

ஆனாலும் இந்தத் தினத்தில் அதற்கும் பெருங்கோபம் வந்தது. நகரவாசிகள் கர்த்தரின் பெருநாளுக்கு தயாராகிய களைப்பில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றிருந்தனர். மனைவியரினதும், பிள்ளைகளினதும், பெற்றோரினதும் குதூகல உறக்கத்தைக் குழப்ப விரும்பாத ஆண்கள் அதிகாலைப் பொழுதில் கடல்மீதேறியிருந்தனர்.

9 மணிக்குள் நிலம் திரும்பி தேவாலய வழிபாட்டுக்கு சென்று விடலாம் என்பது அவர்களின் வழமையான நிகழ்ச்சி நிரல். அதனை இம்முறையும் குழப்பிக்கொள்ளவில்லை.

பெருந்துயர்ப் பெருநாள்


மணற்பரப்பை வேகமாக சூடேற்றிக் கொண்டு மேலெழுந்த சூரியன், நகரவாசிகளையும் துரிதப்படுத்தியது. கொண்டாட்டங்கள், அலங்காரங்கள் வீடுகளை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தன. கடல் வருகுது  என்ற அவல வசனங்கள் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. கடல் எப்படி வரும்? என்ற கேள்விக்கு விடை காணும் முன்பே, பனையளவு உயரத்தில் நகரை மூடியது கருமை அலை.

வீட்டில் இருந்த குழந்தைகள், பெண்கள் என அனைவருமே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மரங்களிலும், பெருங் கட்டடங்களிலும் மோதியவர்கள் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

ஆடைகளைக் கடலிடம் பறிகொடுத்த பெண்கள் தம் உயிர் காப்பாற்றப்படுவது அவமானம் எனக் கருதி மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள். போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வளர்ப்புப் பூமியாக இருந்த தளிர்கள் சிறுவர் இல்லம் இருந்த இடம் தெரியாது பெயர்க்கப்பட் டிருந்தது. அநேகமான குழந்தைகளின் சடலங்கள் கூட இறுதிவரை கிடைக்கவில்லை.

இறால் குளத்தின் இன்றைய பெயர் பணக்குளம்

கண் மூடி திறப்பதற்குள் 3000 உயிர்களைக் கடல் அள்ளிப் போயிருந்தது. 9 மணிக்கு வீடு திரும்பய ஆண்கள் பைத்தியமாயினர். இருந்த எல்லா வாழ்வுத் தடங்களையும் வெடித்த கடலின் கரு நீர் மூடியிருந்தது. அது வரை இறால் குளம் என அறியப்பட்டிருந்த இடம் இன்று தான் பணக் குளமாகியிருந்தது.

அதிக பணங்களை பதுக்கி வைத்திருந்த களஞ்சியமாகியது இறால் குளம். காயங்களோடும், கையில் கிடைத்தவற்றோடும் அந்தப் பெருநகரவாசிகள் புதுக்குடியிருப்பு, முள்ளியவளைப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

பாடசாலைகள் இடைப்பொழுது ஆதரவை அளித்தன. போர் ஓய்விலிருந்த போராளிகள் தாயாய்த் தாங்கினர். ஓவ்வொருவரினதும் காயத்துக்கு ஒத்தடமாயிருந்தனர். அவலம் தாங்கியவர்களின் அழுகையை நிறுத்துவதற்கு மட்டும் ஒருவாரம் பிடித்தது. இரவு முழுதும் அலைப் பயம் விழித்துக் கொண்டேயிருந்தது.

எச்சத்தில் எழுந்திருக்கின்றது இந்தக் கேள்வி

"இனி கடலுக்கே போகமாட்டம்" "நம்பியிருந்த கடல் எங்கள அழிச்சிப் போட்டுது" போன்ற வார்த்தைகள் அப்போது பிரபலமாயிருந்தன. சரியாக ஒரு மாதம் தான் இந்த வார்த்தைகள் செல்லுபடியாகக் கூடியதாயிருந்தன. ஒரு மாதத்துக்குள் கடல் மீதான கோபம் காலாவதியாகியது.

2005 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி முல்லைத்தீவு நகரத்தில் நடந்தது எச்சத்திலும் எழுகை. அத்தோடு பழையபடி கடலைநோக்கி மக்கள் பயணப்படத் தொடங்கினார்கள். பேரலைக்கு முதல் காலத்தில் கடலேறிய பலர் இருக்கவில்லைத் தான்.

ஆனால் அவர்களிடம் இருந்த நம்பிக்கை கடலை வெல்லும் துணிவை வாரியிறைத்துக் கொண்டிருந்தது. ஒருவருடத்தில் முல்லைத்தீவு மறுபடியும் நகரானது. மீண்டும் செழிப்பு. மீண்டும் வசந்தகாலம்.

ஆனால் நகரவாசிகள் மட்டும் குறைந்திருந்தார்கள். அதுவும் நிலைத்திருக்கவில்லை. அடித்தது பெரும்போர். இதுவரை சந்தித்திராத வழிகளில் எல்லாம் துயரம் அந்த நகரத்தை தாக்கியது. அந்தக் கடலையண்டிய கிராமத்தில் ஒரு பேரினத்தின் வாழ்விருப்பையே மூர்ச்சையாக்கியது அந்தப் போர்.

முல்லைத்தீவும் வழமைபோல அடையாளம் இழந்தது. சீர்குலைந்தது. அந்த நகரத்தின் தன்னியல்பாகிய எச்சத்திலும் எழும் திறன், மறுபடியும் கட்டடங்களை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கின்றது. நகரவாசிகள் வளர்கின்றார்களா? என்பதற்கான விடையைத் தான் அந்த நகரமும் ஏக்கத்தோடு தேடிக் கொண்டிருக்கின்றது.

ஏனெனில் இப்போது எதுவும் சொந்தமானதாக இல்லை. கடல் கூட பலரின் தடங்களை நாள் தோறும் காண்கின்றது. போகப் போக கடலும் மரியாதையிழந்து போவதை உணர்கின்றது.

 

 

 

 

ஜெரா
 

Share    
வாசகர் பார்வையில்
 
பெயர்
மின்னஞ்சல்
கருத்து    
 

யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்
news செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 1915 ஆம் தோற்றிவிக்கப்பட்ட ஒரு பழமையான தமிழ் கிராமம் இது. 1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தினால் இடம்பெயர்ந்த நாம் இரண்டு வருடங்களின் பின் மீள் குடியேறிய நிலையில் 1990ஆம் ஆண்டு மீள இடம்பெயர வேண்டி ஏற்பட்டது.  மேலும்...
24 மே 2013, வெள்ளி 3:50 பி.ப கருத்து[ 0 ]
 
பொருளாதார நெருக்கடியால் அரசாஙகம் திணறுகின்றது; ஜே.வி.பி
news அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  மேலும்...
24 மே 2013, வெள்ளி 2:50 பி.ப கருத்து[ 0 ]
 
மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி
news நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   மேலும்...
24 மே 2013, வெள்ளி 2:35 பி.ப கருத்து[ 0 ]
 
பாரிய விலை கொடுத்தே சுதந்திரத்தைப் பெற்றோம் என்கிறார்; சவேந்திர சில்வா
news பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  மேலும்...
24 மே 2013, வெள்ளி 2:25 பி.ப கருத்து[ 0 ]
 
இலங்கை கடற்படையினரால் கைதான தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
news இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரும் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளனர்.   மேலும்...
24 மே 2013, வெள்ளி 12:15 பி.ப கருத்து[ 0 ]
 
ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 12%
news போருக்குப் பின்னான ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 12 சதவீதம்! இலங்கையில்...? - ஐ.எம்.எப்.   மேலும்...
09 பெப்ரவரி 2013, சனி 5:30 பி.ப
 
நலிவடையும் இலங்கைப் பொருளாதாரம்!
news யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
23 ஜனவரி 2013, புதன் 8:20 பி.ப
 
இந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம்?
news இந்த ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம்? தொடர்பான எதிர்பார்ப்புக்களை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.   மேலும்...
02 ஜனவரி 2013, புதன் 7:30 பி.ப
 
இலங்கையில் இந்த ஆண்டு வியாபாரம் மந்தம்!
news சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது இந்த ஆண்டு, இலங்கையில் வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளது - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
18 டிசெம்பர் 2012, செவ்வாய் 6:00 பி.ப
 
வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை!
news இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த நாணயக் கொள்கையினை தளர்த்துவதற்கு மத்திய வங்கி தீர்மாணித்துள்ளது - யாழ்.பொருளாதார இனையம்.   மேலும்...
13 டிசெம்பர் 2012, வியாழன் 5:50 பி.ப
 
மாவட்ட வலைப்பந்து தெல்லிப்பழை சம்பியன்
news யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது.  மேலும்...
20 மே 2013, திங்கள் 11:10 மு.ப
 
முக்கோணக் கிரிக்கெட் தொடரில் மூன்று தமிழ் மாணவர்கள்
news கண்டி பல்லேகலவில் எதிர் வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முக்கோண கிரிக் கெட் தொடரில் விளையாடுவதற்கு 3 தமிழ் மாணவர்க  மேலும்...
10 மே 2013, வெள்ளி 8:20 மு.ப
 
போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் மைதானங்களையும் சரியாக தெரிவு செய்யுங்கள்; பாதிக்கப்பட்ட அணிகள் கோரிக்கை
news மல்லாகம் மகா வித்தியாலய மைதானம் சீரின்மையால் போட்டியில் கலந்து கொண்ட அணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.   மேலும்...
09 ஏப்ரல் 2013, செவ்வாய் 1:10 பி.ப
 
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் HPL போட்டி; முதன்மை விருந்தினராக சரவணபவன் எம்.பி கலந்து சிறப்பித்தார்
news ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.   மேலும்...
01 ஏப்ரல் 2013, திங்கள் 10:45 மு.ப
 
சென்னையில் வேண்டாம்; இலங்கை கிரிக்கெட் சபை
news சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது.  மேலும்...
28 மார்ச் 2013, வியாழன் 4:30 பி.ப
 
சென்னையில் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம்
news சென்னையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும்...
08 மார்ச் 2013, வெள்ளி 10:20 மு.ப
 
 
suvadu இன்றைய சிந்தனை
வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews நந்திக்கடலில் சடலமாக மீட்கப்பட்டவர் எரித்திரியாவிலா? என்ன பேய் கதை என்கிரார்; இராணுவ பேச்சாளர்
pnews 1982 ஜனாதிபதி தேர்தலின் உண்மை நிலை
pnews பறிபோனது டக்ளஸின் பதவி சிலாவத்தைக்கு புதிய நிர்வாகம்
pnews யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது
pnews தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை
 
 
 
banners
banners
banners
news_banners
சிறப்பு கட்டுரைகள்
ஒரு நாள் 3 அப்பாக்கள்.....
அப்பா 01

அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார்.   மேலும்...
முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.   மேலும்...
அழுவதற்கு வேண்டும் அனுமதி
இராமனுக்கு பட்டாபிஷேகம். 14 வருடங்களுக்குப் பின்னர் தலைமகனின் பாதடி பட்ட சந்தோசத்தில் அயோத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது.   மேலும்...
இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.   மேலும்...
நீல அலையில் நவீன மே தினம்
கொழும்பு பொறளை கம்பல் பூங்காவில் கடந்த மே நாளன்று ஒரு பிரமாண்டமான மே தினம். கண்ணைப் பறிக்கும் மின்சார அலங்காரங்கள்.   மேலும்...
 
 
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.