போர் முடிந்த பின்னரும் கூட மக்களை அரசு தொடர்ந்து வதைக்கிறது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பொதுமக்களிடம் இடுப்புப்பட்டிகளை இறுக்குமாறு கூறிய அரசு, போரின் பின்னரும் அதனை மாற்றாதுள்ளது. திருமண பதிவுகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்காக அரசு எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்குவெளியில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்காக அறவிடப்படும் ஆயிரம் ரூபா கட்டணத்தை ஐந்தாயிரம் ரூபாவாக அரசு அதிகரித்துள்ளது.
உயர் மட்டத்திலுள்ளவர்களுக்கு அல்லது அரச உயர் மட்டத்திலுள்ளவர்களின் நண்பர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது. நாட்டினால் சுமக்க முடியாத அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி ஆலோசகர்கள் மூலம் பல்வேறு அரசியல் நியமனங்களை பெற்றுக் கொண்டவர்களுக்காக அரசு வீண்விரயமாக்கும் நிதியை அறவிடுவதற்கு மக்கள் மீது வரி சுமையை திணிக்கின்றது.
பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் நிதியை அமைச்சரவைக்கு செலவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் கைது நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண சபையில் குழப்பம்;ஆளும்தரப்புக்குள் பிளவு கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய முதல்வராக அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு பிரிவுகளாக பிளந்த குழந்தையில் ஆண் உறுப்பு வெற்றிகரமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்ட சம்வம் இன்றைய தினம் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில்.. மேலும்...
நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது. மேலும்...
வடக்குத் தேர்தலுக்கு எதிராக சர்ச்சைகளை எழுப்பி வரும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவிதுள்ளார். மேலும்...
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும்...
யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம். மேலும்...
வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். மேலும்...
யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. மேலும்...
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மேலும்...
சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது. மேலும்...
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார். மேலும்...
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த மேலும்...
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும்...